Monday, 15 December 2014

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் சிறைவாச விபரம் :

தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் சிறைவாச விபரம் :

1956இல் ராமன் படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

1960இல் தேசப்படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

1974இல் இராவணலீலா போராட்டத்தில் கைதானார்.

31.01.1976 முதல் 23.01.1977 வரை மிசா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

31.10.1977 இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டி கைதானார்.

நாகம்மையாரைப்பற்றி அவதூறு எழுதிய ஆஸ்தான கவி கண்ணதாசனை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தியதற்கு 22.03.1979 முதல் 04.04.1979 வரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1981இல் மனுதர்ம சாத்திரத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

16.03.1982இல் இஸ்மாயில், சோமசுந்தரம் கமிஷன்களின் பரிந்துரைகளை அமலாக்கக் கோரி கோட்டை முன் மறியல் செய்து கைதானார்.

23.01.1983இல் ஜெயவர்த்தனேவிற்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.

09.08.1984இல் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி இந்திராகாந்தி வீட்டு முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஆகஸ்டு 15 அய் (1984) துக்க நாளாகக் கருதி திருச்சியில் கருப்புக்கொடி ஏற்றியதற்கு கைது செய்யப்பட்டார்.

ஈழத்தில் ராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனமானது என்று கூறிய துணைக் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு 07.09.1984இல் சென்னையில் கருப்புக் கொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

13.12.1984இல் தமிழக மீனவர்களை சிங்களக்கடற்படை வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மறியல் செய்து கைதானார்.

22.09.1985இல் இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழித்துப்போராட்டம் நடத்தியதற்கு கைது செய்யப்பட்டார்.

காவிரி நீருக்காக திருவாரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் செய்து 30.10.1985 முதல் 05.11.1985 வரை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய கல்வித்திட்ட நகல் எரித்ததற்கு 22.06.1986 முதல் 04.07.1986 வரை சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

07.10.1986 இல் டில்லியில் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

20.02.1987இல் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக கப்பல் மறியல் செய்து தூத்துக்குடியில் கைதானார்.

01.06.1987இல் ஈழத் தமிழருக்காக ரயில் மறியல் செய்து சென்னையில் கைதானார்.

02.08.1987இல் ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்த நகல் எரித்து சிறை சென்றார்.

ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்த தொலைக்காட்சி நிலையம் முன் மறியல் செய்ததற்கு 26.10.1987முதல் 04.11.1987 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

25.01.1988இல் இந்தியக் குடியரசு நாள் விருந்தினராக வந்த ஜெயவர்த்தனேயை எதிர்த்து கொடும்பாவி எரித்து வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றச் சொல்லி போராட்டம் செய்து கைதானார்.

21.03.1988இல் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து மதச் சார்பின்மைக்கு மாறாக ஒவ்வொரு முறையும் சங்கராச்சாரியிடம் செல்லும் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டி சென்னை கிண்டியில் கைதானார்.

10.09.1988இல் விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவை சந்திக்கச் செல்கையில் கைதானார்.

08.11.1988இல் தீண்டாமை, சதி ஆதரவாளர் பூரி சங்கராச்சாரியின் கொடும்பாவி எரித்ததற்கு கைது செய்யப்பட்டார்.

01.08.1989 இல் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி தமிழகம் எங்கும் அஞ்சலகங்கள் முன் மறியல் செய்ததால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

10.10.1990அல் மண்டல் குழுப் பரிந்துரையை தடை செய்த உச்சநீதிமன்ற ஆணையை எரித்து கைதானார்.

09.11.1991இல் காவிரி நீர் மண்டல் குழு பிரச்சினைகளுக்காக தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.

20.01.1992அல் கர்நாடகத் தமிழருக்காக சென்னை அண்ணாசாலை அஞ்சலகம் முன் மறியல் செய்து கைதானார்.

30.04.1992இல் காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கக் கோரி திருவாரூர் அஞ்சலகம் முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.

06.12.1992இல் தடையை மீறி இராவணலீலா விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தி புதுவையில் கைதானார்.

10.02.1993இல் சென்னை இரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

23.04.1993இல் சென்னையில் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி மறியல் போராட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

01.09.1993இல் 69 சதவீதத்தை முடக்கும் உச்சநீதிமன்ற ஆணையை எரித்தற்காக கைது செய்யப்பட்டார்.

02.12.1994இல் இந்தி திணிப்பு மற்றும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து சென்னையில் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.

31.08.1995இல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது சென்னை புதுப்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் 25.09.1995இல் தமிழகத்தில் 69 சதவீத இடஓதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்ற ஆணையை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

23.08.1996இல் சமூகநீதிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடும்பாவியை எரித்ததற்கு 15 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

29.12.2000இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உரிமை கோரி இந்து அறநிலைய அலுவலகம் முன்பு மறியல் செய்து தஞ்சையில் கைதானார்.

09.12.2004இல் சமூக நீதி கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்றம் முன் மறியல் செய்ய முயன்றபோது கைதானார்.

சென்னையில் 01.02.2006 அன்று அனைத்து சாதியினர் அர்ச்சகராக உரிமை கோரி மறியல் செய்து கைதானார்.

01.11.2006இல் தமிழ்நாடு அய்.ஏ.எஸ் அதிகாரிகளை அவமதித்ததற்கு நீதிபதி முகோபாத்யாயா மன்னிப்பு கேட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் முன் மறியல் செய்து கைதானார்.

23.09.2008இல் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க ரயில் மறியல் செய்து கைதானார்.

29.12.2008இல் பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமிலேயர் முறை திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் செய்து கைதானார்.

02.09.2009இல் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக ரயில் மறியல் செய்து கைதானார்.

05.06.2010இல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட கோரி சென்னையில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கி.வீரமணி 46 ஆவது முறையாக சிறை சென்றார்.

15.10.2012 அன்று நெய்வேலியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராத கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்க கூடாது என்று நெய்வேலி நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தி தமிழர் தலைவர் 47வது முறையாக கைதானார்.
பகவான் கிருஷ்ணனின் யோக்கிதையை தோலுரிக்கிறார் பெரியார் :

கிருஷ்ணபகவானின் லீலா விநோதங்களில் ஒன்றாகிய கோபிகைகளுடன் கூடி குலாவி வருவதை கிருஷ்ண பகவானின் தங்கையாகிய சுபத்திரை பார்த்து பொறாமைப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணபகவானிடம் சென்று "ஓ அண்ணாவே! நீ எவ்வளவோ அழகாகவும், பெருமை உள்ளவனாகவும் இருக்கின்றாய். உன்னுடன் கூடி அனுபவிக்கும் பெருமை கோபிமார்கள் எல்லோரும் பெற்று அனுபவித்து வருகின்றார்கள். ஆனால், நானோ உனக்கு தங்கையாகப் பிறந்துவிட்ட காரணத்தினால் அந்த சுக போகத்தை அடைய யோக்கியதையில்லாதவளாய்ப் போய் விட்டேன்" என்று துக்கப்பட்டதாகவும், கிருஷ்ணபகவான் பார்த்து, "உலகத்திலேயே மிகவும் புண்ணிய பூமியாகிய ஜகநாதம் என்கின்றதாக ஒரு ஸ்தலம் இருக்கின்றது. அங்கு எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது; எந்தவிதமான செய்கைக்கும் பாவம் கிடையாது; ஆதலால் அந்த ஜகநாதத்திற்குப் போய் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கலாம்" என்பதாகச் சொல்லி ஜகநாதத்திற்கு வந்து கிருஷ்ணன், சுபத்திரை, பலராமன் ஆகிய சகோதர சகோதரிகள் ஒன்று சேர்ந்து இருப்பதாகவும் ஒரு கதையை ஜெகநாத பண்டாக்கள் ஸ்தல மகிமையைச் சொல்லும் முறையில் சொல்வதுண்டு.

- தந்தைபெரியார்- ( "விடுதலை" 5-8-2009 பக்கம் -8)




” மை நாதுராம் கோட்சே போல்தே “

” மை நாதுராம் கோட்சே போல்தே “

பிஜேபி ஆண்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள், வட மாநிலங்களில். மை நாதுராம் கோட்சே போல்தே - என்பது அந்த நாடகத்தின் பெயர். நான் தான் கோட்சே பேசுகிறேன் என்பது அதன் பொருளாகும்.
அந்த நாடகத்தின் கருப்பொருள் என்ன தெரியுமா? காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே கடவுள் அவதாரம் என்றும், காந்தியார் ஓர் அரக்கன் என்றும் அந்த நாடகத்தில் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
காந்தியார், தங்களுக்குப் பயன்பட்ட வரை அவரை மகாத்மா என்று போற்றிப் புகழ்ந்தனர். இன்னொரு கட்டத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்க உணர்வைப் புரிந்து கொண்ட நிலையில், இந்துத்துவாவாதிகளின் நச்சு மனப்பான்மையை அவர் அறிந்த தன்மையில், அவர் போக்கில் சற்று மாறுதல் தெரிகிறது என்பதை நுகர்ந்து, அக்கணமே அவரைத் தீர்த்துக் கட்டி விட்டனர்.
அப்பொழுது ஒரு முறை கொன்றனர் என்றால் பிஜேபி ஆட்சியில் இன்னொரு முறை அவரை அரக்கன் என்று கூறி அவரைக் கொச்சைப்படுத்திக் கொன்றுள்ளனர்.

- விடுதலை நாளிதழ்


தமிழ்நாடு தமிழருக்கே கோரிக்கை

புரட்டுக்கு மறுப்பு


முன்னோடி. . .
பின்னோடி....?
- கி.தளபதிராஜ்


தமிழ்நாடு தமிழருக்கே' கோரிக்கையை முதலில் எழுப்பியவர் மறைமலையடிகள் தான். தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன் எழுப்பியவர் பெரியார் இல்லை என்கிறார் மணியரசன். வழக்கமான அவரது புரட்டுக்கு மறுப்பு.
இந்தியா ஒரு நாடா? என 1930களிலேயே வினா எழுப்பியவர் பெரியார்.
இந்தியா ஒரு நாடு ஆனால்தானே, இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு. இந்தியா ஒரு நாடாகியிருக்கின்றதா? இந்தியா, ஜாதிகள் காட்சிசாலையாக, சாமிகள் காட்சிசாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கிறது? இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ, முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமானதாகுமா? மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி நம் நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள். யார் எந்த நாட்டோடு சேர்ந்து கொள்வதென்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
(சேலத்தில் பெரியார்  உரை -'குடிஅரசு' 1.6.1930) இந்தியா நம் தாய்நாடு என்று சொல்வதற்குத்தான் என்ன ஆதாரம் இருக்கிறது? இந்தியா என்கிற பெயர் இந்த நாட்டுக்கு எப்போது ஏற்பட்டது? இதற்கு எல்லை என்ன? பர்மா சென்ற ஆண்டு பிரிந்துவிட்டது. அதற்குமுன் நேபாளம், பூடான் பிரிந்துவிட்டன. அதற்குமுன் காந்தாரம், காபூல் பிரிந்துவிட்டன. இப்படியே எவ்வளவோ பிரிந்தும், சேர்ந்தும் இருக்கின்றன. இந்த நிலையில் தாய்நாடு எது? தகப்பன் நாடு எது? புராண காலத்தில் 56 நாடுகள் இருந்தனவே, அப்போது ஒரு நாட்டுக்காரன் இன்னொரு நாட்டைத் தாய்நாடு என்று கருதினானா?
மாகாண சுதந்திரம் கொடுத்து மாகாணத்துக்கு மாகாணம் சர்வ சுதந்திரமாய் தன்தன் காலிலேயே நிற்கும்படியான நிலைமை ஏற்பட்டு, அய்ரோப்பா தேசத்தைப்போல மொழிவாரியாக தனித்தனி நாடாகப் பிரித்துக்கொண்டபின் இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய்நாடாகும்? நேபாளம் நம் ஒரு ஜில்லாவைப்போல் உள்ள விஸ்தீரணம். அவர்கள் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா? சயாமில் பெரிதும் இந்து மதம்தான். அவர்கள் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?
அய்ரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலெண்டு, பெல்ஜியம், போர்ச்சுகல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் நாட்டைத் தாய்நாடு என்பார்களே ஒழிய அய்ரோப்பாவைத் தாய்-நாடென்-பார்களா?
ஆகவே, தமிழ்நாட்டவர்கள், திராவிட மக்கள், எந்தக் காரணம் கொண்டு இந்தியாவைத் தாய்நாடென்று கூறவேண்டுமென்பதும், எதற்காக இந்தியா முழுவதும் எப்போதும் ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என்பதும் எனக்கு விளங்கவில்லை.
(ஈரோடு கொல்லம்பாளையத்தில் பெரியார் உரை -'குடிஅரசு' 26.9.1937)
1937லேயே நாடு பிரியவேண்டுமென்றேன். இதை அன்றிருந்த வடநாட்டார் தெரிந்துதான் இருக்கிறார்கள். பதவி ருசியைக் காட்டி நம்மவர்களை ஏய்த்து விடுகிறார்கள்.
(விடுதலை 25.7.1957)
நாட்டுப்பிரிவினை என்னும் விஷயத்தை 1938லேயே முதன்முதலாக நான் துவக்கினேன். பிறகு ஜஸ்டிஸ் கட்சித் தலைவனானவுடன் அப்பிரச்சினை ஜஸ்டிஸ் கட்சி பிரச்சினையாகி பிரபலம் பெற்று, ஜின்னா சாயபு, அம்பேத்கர் ஆகியவர்களுடைய ஆதரவும் பெற்று, யுத்தத்திற்குப் பிறகு பிரிட்டீஷ் அரசாங்கத்திடமும் அது சமர்ப்பிக்கப்பட்டது. இதை(பிரிவினையை)ப் பற்றிப் பல திட்டங்கள் பிரிட்டீஷாரிடமே கொடுக்கப்பட்டன. அத்திட்டங்களில் ஒன்றுதான் பாகிஸ்தான் பிரச்சினையாகவும் முளைத்தது. - (விடுதலை தலையங்கம் 30.3.1967)
1930களில் துவங்கி தன் இறுதி மூச்சு அடங்கும் வரை பல்வேறு காலகட்டங்களில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்த பெரியாரை மறுத்து 11.9.1938இல் சென்னையில் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் ஆகியோர்  கலந்து கொண்ட இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் மறைமலையடிகள் 'தமிழ்நாடு தமிழருக்கே' தீர்மானத்தை முன்மொழிந்ததாகவும் அவரே அதற்கு முன்னோடி எனவும் மணியரசன் வாதிடுவது சரியா?
ஒரு மாநாட்டில் ஒரு தீர்மானத்தை ஒருவர் முன்மொழிவதாலேயே அவர் அந்தத் தீர்மானத்தின்  காரணகர்த்தா ஆகிவிடுவாரா என்பது பொதுவாழ்வில் ஈடுபடுவோர் அறியாததல்ல என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்தத் தீர்மானத்தின் நோக்கம் பெரியார் கேட்ட இந்திய அமைப்பிலிருந்து விடுபட்ட தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தா? 11.9.1938இல் நடைபெற்ற கூட்டத்தைப்பற்றி 25.9.1938இல் வெளியான குடிஅரசு கட்டுரை கூறுவது என்ன? தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க தமிழர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மாகாணப் பிரிவினை இயக்கத்திற்கு முதல்படியே.........
தமிழ் ராஜாங்கப் பாஷையாகித் தீரவேண்டும். தமிழ் மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டால்தான் தமிழ் ராஜாங்க பாஷையாக முடியும். ஆகவே தமிழ் மாகாணப் பிரிவினை விஷயத்தில் தமிழர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது. மணியரசன் வலியுறுத்தும் தமிழ்த்தேசியம் இதுதானோ? இதற்குத்தான் மறைமலையடிகள் முன்னோடி என்று சொன்னால் அதுவும் உண்மையல்லவே!
1926இல் ஒன்றுபட்ட சென்னை மாநிலத்திலிருந்த பத்து தமிழ் மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து டொமினியன் அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தவர் சர்.சி.சங்கரன் நாயர் என்ற மலையாளியாயிற்றே!
பெரியாரைக் கொச்சைப்படுத்தி நீங்கள் சாதிக்கப்போவதுதான் என்ன? என்ன?


துல்லியமாக கணித்தார் பிரபாகரன்!” – கி.வீரமணி

துல்லியமாக கணித்தார் பிரபாகரன்!” – கி.வீரமணி
”பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?”
”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர் பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவற மாட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.
1986-ம் ஆண்டு நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்தார் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்து, ஈழப் பிரச்னை தொடர்பாக சுமுகமான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி விரும்பினார். தன் விருப்பத்தை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடமும் தெரிவித்து, ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டார் ராஜீவ். எம்.ஜி.ஆர் தமது உளவுத் துறை அதிகாரிகள் மூலம் தமிழ்நாடு முழுக்கத் தேடியும் பிரபாகரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது உடல் நலம் சரியில்லாமல் நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
அங்கே வந்து தமிழக காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர், என்னைச் சந்தித்தார். ”எப்படியாவது பிரபாகரனை பெங்களூருக்கு அனுப்பி, ஜெயவர்த்தனேவைச் சந்திக்கச் செய்யுங்கள்’ என்று முதல்வர் உங்களிடம் தகவல் சொல்லச் சொன் னார்’ என்றார். அந்த அதிகாரிக்கு எங்களைப் பற்றி தெரியும். அப்போது பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்று உண்மையாகவே எனக்குத் தெரியாது. ‘தகவல் அனுப்ப முடிந்தால், அவசியம் சொல்லி அவரை பெங்களூருக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்’ என்றேன்.
ஆச்சர்யமாக, அதே நாளில் எனது உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு திடீரென்று வந்து நின்றார் தம்பி பிரபாகரன்! என்னால் நம்பவே முடியவில்லை. பிரபாகரனிடம் எம்.ஜி.ஆரின் ஆலோசனையைப் பற்றி சொல்லி, அவரை பெங்களூருக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவர் அதில் ஆர்வம் காட்டவே இல்லை. ஆனால் ‘நீங்கள் செல்லாவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு நல்விளைவு ஏற்படுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்கிற பேச்சு உருவாகும்’ என்றெல்லாம் அவரைச் சமாதானப்படுத்த முயற்சித்தேன். இறுதியில், “அந்தச் சந்திப்பினால் எந்த விளைவும் ஏற்படாது. ஆனாலும், தமிழக முதல்வர் மற்றும் உங்களைப் போன்றவர்கள் சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன்” என்றார். அவரது கணிப்புதான் பிறகு சரி என்று ஆனது!
பின்னர், புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளை தமிழக அரசு பறிமுதல் செய்ததை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார் பிரபாகரன். ‘உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டுப் போராடுங்கள்’ என்று அறிக்கை விடுத்தேன். அதை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள முன்வந்தனர் புலிகள். சென்னை இந்திரா நகரில் நடந்த உண்ணாவிரதத்தை பழரசம் கொடுத்து நாங்கள் முடித்துவைத்தோம். ஆயுதங்களையும் திரும்பத் தரும் நிலை உடன் வந்தது.
புலிகள் இயக்கத்தின் தளபதி கிட்டு ஆற்றலும் அறிவும் பண்பும் நிறைந்தவர். ஆன்டன் பாலசிங்கமும் எங்களிடம் பல நேரங்களில் அறிவார்ந்த ஆலோசனைகளைப் பெறுவார். பேபி (சுப்பிரமணியம்), எப்போதும் அன்புடன் பழகிய அதிகம் பேசாத தம்பியின் தளகர்த்தர். இப்படி பலரும் அன்புடன் பழகியவர்கள். இதையெல்லாம் நினைவுகூர்ந்து எழுதும்போது என்னை அறியாமல் கண்கள் பனிக்கின்றன!”
விகடன் மேடை – கி.வீரமணி பதில்கள்

எது முக்கியம் ? சிலையா - கழிப்பறையா

தாயகத்தில் கழிப்பறைகள் கட்ட உதவுவீர்:

ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களுக்கு
மோடி அழைப்பு!

3000 கோடியிலே படேலுக்கு சிலை வைக்கறீயே,அந்தக் காசில் நாடு முழுக்க கக்கூஸ் கட்டு,அந்த திட்டத்துக்கு படேலோட பேர வைக்கலாம்ல.

- யுவான் சுவாங்

"தந்தை பெரியார் கொலாஜ் ஓவியம்"

"தந்தை பெரியார் கொலாஜ் ஓவியம்"

ஓவியர்.ஆர்.ராஜராஜன்.
எந்த ஊடகத்தில் வடிவமைத்தாலும் பெரியாரின் முகம் சிறப்பாகவே அமையும்,
(காகித கொலாஜ் ஓவியம், வடிவமைத்த ஆண்டு-2012.)

- Rajarajan Artist

குழந்தைகளுக்கான தமிழ் மாத இதழ் - பெரியார் பிஞ்சு


பிறப்பில் மதம் ஏது ?

உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நாத்திகவாதியாகப் பிறக்கிறது. பிறருடைய போதனையினாலும் தயாரிப்பினாலுமே தெய்வ நம்பிக்கை ஏற்படுகிறது.

- சார்லஸ் பிராட்லா

பெண் சுதந்திரம் - கவிதை

-சலிப்பு-

கருவில் இருந்து
தரையில் விழுந்ததும்
சலித்துக் கொள்கிறார்கள்
பெண் குழந்தையென்று
ஆண்களின் சலிப்பை
ஆணாதிக்கம் என்றெண்ணலாம்
பெண்களின் சலிப்பை
என்னவென்று எண்ணுவது ?

- மகிழ் ஈவெரா

குடி அரசு - விடுதலை


மூத்திர வாளி சுமந்து - கவிதை

மூத்திர வாளி சுமந்து
இழிவு துடைத்த
ஈரோட்டுக் கிழவனின்
கொள்கை வாரிசுகள்,
அவர் கொள்கைகளை 
முன்னெடுத்துச் செல்வார்கள்
முன்பை விட
இன்னும் வலிமையாய் ...

- மகிழ் ஈவெரா



கடவுள் செத்துடுச்சா ?

சற்று முன்:

நண்பர்: மதத்தை எல்லாம் விடுங்க! ஆனால், கடவுள் என்ற ஒன்றை நம்பித்தான் ஆகனும்!

நான்: எதுக்குங்க?

நண்பர்: உலகை படைத்தது கடவுள்! உயிர்களை படைத்தது கடவுள்!

நான்: இதை யார் கண்டுபிடிச்சா?

நண்பர்: இல்லை என்பதை யார் கண்டுபிடிச்சா?

நான்: சரி! நீங்கள் நம்புற படி கடவுள்தான் உயிரை படைத்ததாக இருந்துட்டு போகட்டும்! அதுக்கு எதுக்கு கோவில் கட்டி பூஜை செய்யனும்?

நண்பர்: உலகை உயிரை படைத்த கடவுளுக்கு நன்றியை செலுத்துவதற்காக கோவில் கட்டி பூஜை செய்கிறார்கள்.

நான்: உலகை, உயிரை கடவுள் உருவாக்கியதா? இல்லையா? என்பதில் உங்களுக்கு சந்தேகமில்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால், உங்களை உருவாக்கியது உங்கள் தாய் தந்தையர். உங்கள் அறிவுக்கும், இருக்கும் சொத்துக்கும் அவர்கள்தான் காரணம். இது உண்மை. இந்த உண்மையை நீங்களும் நானும் மறுக்க முடியாது. உண்மையா? இல்லையா?

நண்பர்: உண்மை!

நான்: ஆதாரமே இல்லாத ஒன்றுக்கு நம்பிக்கை அடிப்படையில் கோவில் கட்டி பூஜை செய்கிறீர்கள்! அந்த கோவிலுக்குள் உள்ளே நுழைந்து பூஜை செய்யக்கூட உங்களுக்கு அனுமதி இல்லை, நீங்கள் உள்ளே நுழைந்தால் தீட்டு பட்டுடும் என்று சொல்லுகிறார்கள்! ஆனால், உங்கள் உயிருக்கும் உடமைக்கும் காரணமான உங்கள் பெற்றோருக்கு ஏன் கோவில் கட்டுவதில்லை? ஏன் பூஜை செய்வதில்லை?

நண்பர்: அவங்க உயிரோட இருக்காங்க?

நான்: அப்ப கடவுள் செத்துடுச்சா?

நண்பர்: அட போங்க! உங்களோட பேச முடியாதுங்க!

- திராவிடப் புரட்சி

உலகத்தை படைத்தது கடவுளா ?


உலகத்தை படைச்சது கடவுள்ன்னு அந்தக் காலத்திலேயே எவனோ கப்சா விட்டுட்டு போயிட்டான். நம்ம ஆள் அறிவாளியா இருந்தா, இந்நேரம் கடவுளை தேடி இருக்கணுமா இல்லையா. அதை விட்டுட்டு எவனோ சொன்னதையே இவனும் சொல்லிகிட்டு திரியிறான்.

100 வருசம் இல்ல 100000000000000 வருசம் ஆனாலும் உங்க கடவுளை கண்டு பிடிக்க முடியாது. ஏன்னா ... இல்லாத ஒன்ன எவனால தேடி கண்டுபிடிக்க முடியும் ?

- பாசு ஓவியச்செல்வன்

சென்னை பெரியார் திடலில் பறையிசை பயிற்சி - 2014 டிசம்பர் 26,27,28


கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரியின் பூணூல் பாசம்

கிழக்கு பதிப்பக உரிமையாளர் மரியாதைக்குரிய அருமை நண்பர் Badri Seshadri அவர்கள், பிராமணர்கள் அனைத்து மட்டத்திலும் பின்தங்கியிருப்பதாக வருந்தி எழுதியுள்ளார். இன்று எந்தெந்த தளங்களில் பிராமணர்கள் இல்லை எனும் பட்டியலையும் அடுக்கியுள்ளார்.
.
பல்வேறு துறைகளில் பிராமணர்கள் இல்லை என சொல்லத் தெரிந்த அவருக்கு, ரயில்வேயின் துப்புரவு தொழிலாளர்களாக, தண்டவாளத்தில் கிடக்கும் மலத்தை அள்ளும் அரசுப் பணியாளர்களாக ஒரே ஒரு பிராமணர் கூட இல்லையே; அதை ஏன் சொல்லத் தெரியவில்லை?.
.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யின் 600 பேராசிரியர்களில் 90 விழுக்காடு பேர் பிராமணர்கள் என்பது பத்ரிக்கு தெரியாது போல!

- Aloor Shanavas

இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா?

இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா?
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

நாள் : 12.12.2014 ( வெள்ளிக்கிழமை )
நேரம் : மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை
இடம் : பெரியார் திடல், சென்னை

தலைமை : ஆசிரியர் கி.வீரமணி

உரைவீச்சு :
தா.பாண்டியன்
தொல்.திருமாவளவன்
பேரா.சுப.வீரபாண்டியன்
பேராசிரியர் அருணன்