” மை நாதுராம் கோட்சே போல்தே “
பிஜேபி ஆண்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள், வட மாநிலங்களில். மை நாதுராம் கோட்சே போல்தே - என்பது அந்த நாடகத்தின் பெயர். நான் தான் கோட்சே பேசுகிறேன் என்பது அதன் பொருளாகும்.
அந்த நாடகத்தின் கருப்பொருள் என்ன தெரியுமா? காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே கடவுள் அவதாரம் என்றும், காந்தியார் ஓர் அரக்கன் என்றும் அந்த நாடகத்தில் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
காந்தியார், தங்களுக்குப் பயன்பட்ட வரை அவரை மகாத்மா என்று போற்றிப் புகழ்ந்தனர். இன்னொரு கட்டத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்க உணர்வைப் புரிந்து கொண்ட நிலையில், இந்துத்துவாவாதிகளின் நச்சு மனப்பான்மையை அவர் அறிந்த தன்மையில், அவர் போக்கில் சற்று மாறுதல் தெரிகிறது என்பதை நுகர்ந்து, அக்கணமே அவரைத் தீர்த்துக் கட்டி விட்டனர்.
அப்பொழுது ஒரு முறை கொன்றனர் என்றால் பிஜேபி ஆட்சியில் இன்னொரு முறை அவரை அரக்கன் என்று கூறி அவரைக் கொச்சைப்படுத்திக் கொன்றுள்ளனர்.
- விடுதலை நாளிதழ்

No comments:
Post a Comment