Monday, 15 December 2014

பகவான் கிருஷ்ணனின் யோக்கிதையை தோலுரிக்கிறார் பெரியார் :

கிருஷ்ணபகவானின் லீலா விநோதங்களில் ஒன்றாகிய கோபிகைகளுடன் கூடி குலாவி வருவதை கிருஷ்ண பகவானின் தங்கையாகிய சுபத்திரை பார்த்து பொறாமைப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணபகவானிடம் சென்று "ஓ அண்ணாவே! நீ எவ்வளவோ அழகாகவும், பெருமை உள்ளவனாகவும் இருக்கின்றாய். உன்னுடன் கூடி அனுபவிக்கும் பெருமை கோபிமார்கள் எல்லோரும் பெற்று அனுபவித்து வருகின்றார்கள். ஆனால், நானோ உனக்கு தங்கையாகப் பிறந்துவிட்ட காரணத்தினால் அந்த சுக போகத்தை அடைய யோக்கியதையில்லாதவளாய்ப் போய் விட்டேன்" என்று துக்கப்பட்டதாகவும், கிருஷ்ணபகவான் பார்த்து, "உலகத்திலேயே மிகவும் புண்ணிய பூமியாகிய ஜகநாதம் என்கின்றதாக ஒரு ஸ்தலம் இருக்கின்றது. அங்கு எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது; எந்தவிதமான செய்கைக்கும் பாவம் கிடையாது; ஆதலால் அந்த ஜகநாதத்திற்குப் போய் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கலாம்" என்பதாகச் சொல்லி ஜகநாதத்திற்கு வந்து கிருஷ்ணன், சுபத்திரை, பலராமன் ஆகிய சகோதர சகோதரிகள் ஒன்று சேர்ந்து இருப்பதாகவும் ஒரு கதையை ஜெகநாத பண்டாக்கள் ஸ்தல மகிமையைச் சொல்லும் முறையில் சொல்வதுண்டு.

- தந்தைபெரியார்- ( "விடுதலை" 5-8-2009 பக்கம் -8)




No comments:

Post a Comment