பிரிட்டீஷ் ஒலிபரப்பு நிறுவனத்தின் சார்பில் உட்ரோ உவையட் என்பவர் ரசலிடம் கண்ட பேட்டி ....
உவையட்: ஒரு நம்பிக்கையை அல்லது மதத்தைப் பின்பற்றவேண்டும்; இன்றேல் வாழ்க்கையை எதிர் நோக்க முடியாது என்று கூறும் மக்கள் என்ன ஆவது ?
ரஸலின் பதில்: ஒரு வகையான கோழைத்தனத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாக உணரும் மக்கள் வேறு எந்தத் துறையிலும் வெறுக்கத்தக்கவர்களாகவே கருதப்படுவார்கள். ஆனால், மதத்துறையில் காணப்படும்போது, அது பாராட்டத்தக்கதாக நினைக் கப்படுகிறது. கோழைத்தனம் எந்தத் துறையில் காணப்பட்டாலும் நான் அதைப் பாராட்ட முடியாது.
உவையட்: ஆனால், நீங்கள் அதைக் கோழைத் தனம் என்று கூறுகிறீர்கள்!
ரஸலின் பதில் : இது இல்லாமல் அது இல்லாமல் வாழ்க்கையை எதிர்த்து நிற்க முடியாது என்று கூறுவதற்காக சொல்கிறேன். வாழ்க்கை எதை அவர்களுக்குத் தந்தாலும் ஒவ் வொருவரும் வாழ்க்கையை எதிர்த்து நிற்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்

No comments:
Post a Comment