கையிலிருக்கும் வீணை
கொண்டு
சரஸ்வதி ஒலி எழுப்பி
எவரேனும் கேட்டதுண்டா
?
மயில் மீதேறி முருகன்
எங்கேனும் பயணித்ததை
எவரேனும் கண்டதுண்டா ?
இலட்சுமியின் தாமரை
மணம் உமிழ்ந்து
அதை முகர்ந்தவர்
உண்டா ?
சிவன் தலை மீதிருந்த
கங்கையின் ருசி
அறிந்த
நாவுகள் உண்டா ?
பசியை பிணியை
உணர முடிகிறதே !
பகவானை உணர முடியலையே
...
- பாசு . ஓவியச் செல்வன்
No comments:
Post a Comment