இந்த அய்யப்பன் யார் ?
இவன் சபரிமலைப் பகுதியில் இருந்துகொண்டு வழிப்பறி செய்து வாழ்ந்துவந்த கொள்ளைக்கூட்டத் தலைவன். அவன் வருவதைக் கண்டு மக்கள் அய்யோ! அப்பா என்று அலறியடித்துக் கொண்டு ஓடுவார்களாம். அதனால் அவனுக்குப் பெயரும் அய்யோப்பா என்றே ஆயிற்று. அது நாளடைவில் திரிந்து அய்யப்பா என்று ஆயிற்று. அவன் இறந்த பிறகு அவனை அம்மலையிலேயே புதைத்தனர் அவன் ஆட்கள். பின்னர் அவனுக்கு உருவச்சிலை வைத்தனர்.அவனுக்கு முன்னோடியாயிருந்த கருப்பு என்பவனைப் பதினெட்டாம்படிக் கருப்பு எனவாக்கினர். இதுதான் அய்யப்பன் உண்மை கதை.
- "விடுதலை" ஞாயிறுமலர் 3-1-2009

No comments:
Post a Comment