Sunday, 19 October 2014

பம்பா நதி புனிதமானதா ?



சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக பம்பா நதியில் முழுக்குப் போடுவார்கள். பம்பா நதி பற்றி இதற்கு முன் வந்த தகவல்களைக் கொஞ்சம் அறிவுத் தராசில் எடை போட்டுப் பார்க்கட்டும்!

நூறு லிட்டர் பம்பா நதியில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர். 1999-2000 ஆம் ஆண்டில் இந்த அளவு 2 லட்சத்து 55,000 கிருமிகள் இருப்பதாகக் கூறப்பட்டது. பெரும் பாலும் பம்பா நதி மனிதக் கழிவுகளால் பாழ்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்த வகை
பாக்டீரியாக்கள் 500 என்ற அளவில் இருந்தாலே ஆபத்து - இரண்டரை லட்சம் என்கிற போது தலையே சுற்றுகிறது!


- மயிலாடன்

No comments:

Post a Comment